ஹோம் /நியூஸ் /இந்தியா /

டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை.. முன்னாள் காதலன் டார்ச்சர்? - சிக்கிய கடிதத்தால் பரபரப்பு

டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை.. முன்னாள் காதலன் டார்ச்சர்? - சிக்கிய கடிதத்தால் பரபரப்பு

வைஷாலி

வைஷாலி

Vaishali Takkar : டிவி நடிகை வைஷாலியின் அறையில் இருந்து ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Indore, India

  சின்னத்திரை நடிகை வைஷாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  சின்னத்திரை நடிகை வைஷாலி ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனது தந்தை மற்றும் சகோதரருடன், 29 வயதான வைஷாலி வசித்து வந்தார். நீண்ட நேரமாக அவரது அறை திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், வைஷாலி இருந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேஜாஜி நகர் காவல்துறையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷாலியின் அறையில் இருந்து ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வைஷாலிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவரது முன்னாள் காதலன் அளித்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

  கல்லூரி படிப்பை 2014-ல் முடித்த வைஷாலி டிவி சீரியல்களில் நடிப்பதற்காக மும்பை வந்துள்ளார். அதில் இருந்து தொடர்ந்து இவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் மன்மோகினி, சூப்பர் சிஸ்டர்ஸ் விஷ், அமிர்த் உள்பட பல வெற்றி பெற்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். வைஷாலி நெகடிவ் ரோலில் நடித்ததற்காக விருது பெற்றுள்ளார். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Commit suicide, Tamil News, TV actress