ஆணவக்கொலை: பட்டப்பகலில் மனைவி கண் முன்னே கணவன் வெட்டிக்கொலை

news18
Updated: September 14, 2018, 8:11 PM IST
ஆணவக்கொலை: பட்டப்பகலில் மனைவி கண் முன்னே கணவன் வெட்டிக்கொலை
படுகொலை செய்யப்பட்ட பிரணவ்.
news18
Updated: September 14, 2018, 8:11 PM IST
தெலங்கானா மாநிலத்தில் பட்டபகலில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியின் கண் முன்னே கணவனை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கனா மாநிலத்தைச் சேர்ந்தவர் அம்ரூதா, சாதி இந்து வகுப்பைச் சேர்ந்த இவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரணய் பெருமுல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கர்ப்பமாக உள்ள அம்ரூதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துவிட்டு திரும்புகையில், மருத்துவமனை வளாகத்திலேயே பிரணவ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்வவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


அதில், அம்ரூதாவும், பிரணவும் இயல்பாக பேசிகொண்டே மருத்துவமனையிலிருந்து வெளியே செல்கின்றனர். மருத்துவமனையின் வாசற் கதவகருகே செல்லும்போது, பின்னாலிருந்து உயரமான நபர் ஒருவர் கையில் அரிவாளுடன் விறு விறுவென்று அவர்களை நோக்கி நடந்து செல்கிறார். பிரணவின் அருகில் சென்ற அந்நபர், பின்புறமிருந்து அரிவாளால் பிரணவை வெட்டினார். நிலை தடுமாறி கீழே விழுந்த பிரணவின் பின் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடுகிறார்.Loading...

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அம்ரூதாவும், கூடச்சென்ற இன்னொரு பெண்ணும் உதவி கேட்டு மருத்துவமனைக்குள் ஓடி வருகின்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே பிரணவ் உயிரிழந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும், அம்ரூதாவின் தந்தையே இக்கொலைக்கு காரணம் என்றும், அவரை கைது செய்யவேண்டும் எனவும் பிரணவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். பிரணவை படுகொலை செய்த நபரை தெலங்கானா போலீசார் தேடி வருகின்றனர்.


அம்ரூதா, விநாயகர் சதூர்த்திக்கு சில புகைப்படங்களை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தான் கர்ப்பமாகியுள்ளது குறித்தும் அவர் சில பதிவுகளை போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு, உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவின் கண் முன்னே அவரது கணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். சாதி இந்து வகுப்பைச் சேர்ந்த கவுசால்யாவின் தந்தையே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரை ஆட்களை அனுப்பி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கவுசல்யாவின் தந்தை சின்னசுவாமிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...