827 ஆபாச தளங்களை முடக்குக - இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவு

மாதிரிப் படம்

உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற உத்தரவின் படி 827 ஆபாச இணையதளங்களை முடக்குமாறு இணைய சேவைகள் வழங்கும் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆபாச வீடியோக்களுக்கு ஏராளமான இணையதளங்கள் இருக்கின்றன. பல நிறுவனங்கள் சர்வதேச அளவில் இந்தத் தளங்களை இயக்கி வருகின்றன. இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது போன்ற தளங்களுக்கு எந்த தடையும் இல்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் இருக்கும் இணையதளங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆபாச இணையதளங்களை முடக்கும்படி தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 27-ம் தேதியன்று தீர்ப்பு வழங்கிய உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

நீதிமன்றம் கூறிய 857 ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில், 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை. மீதமுள்ள 827 தளங்களில் ஆபாச படங்கள் இருந்துள்ளன. எனவே, அந்த 827 தளங்களை முடக்கும்படி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமானது, தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து நிவனங்களுக்கும் ஆபாச தளங்களை முடக்குமாறு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு ஆபாச தளங்களை முடக்க வேண்டும் என கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் “ஆபாச இணையதளங்கள் அனைத்தையும் முடக்குவது இயலாத காரியம். ஆபாச தளங்களை முடக்க வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என மத்திய அரசு பதில் அளித்திருந்தது.

சில ஆண்டுகளுக்குப் பின் ஆபாச தளங்களை முடக்க மத்திய அரசு முயற்சித்த போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், மத்திய அரசு அந்த முயற்சியை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்..

விமானத்தில் நடனமாடிய பணிப்பெண்கள்! வைரலாகும் வீடியோ..

3 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Also See..Watch Also:
Published by:Sankar
First published: