ஹோம் /நியூஸ் /இந்தியா /

தந்தை கண்முன்னே மகள் கடத்தல்.. ஷாக்கான அப்பாவுக்கு ட்விஸ்ட் வைத்த பொண்ணு - அடடே சம்பவம்!

தந்தை கண்முன்னே மகள் கடத்தல்.. ஷாக்கான அப்பாவுக்கு ட்விஸ்ட் வைத்த பொண்ணு - அடடே சம்பவம்!

காதலியை கடத்திய காதலன்

காதலியை கடத்திய காதலன்

Telangana kidnap | காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக போட்ட மாஸ்டர் ப்ளான் என கண்டுபிடித்ததால் பெண்ணின் தந்தை அதிர்ச்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் தந்தையை அடித்து கீழே தள்ளிவிட்டு, இளம் பெண்ணை காரில் கடத்திச் செல்லும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம் முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் தனது மகள் ஷாலினியுடன் திங்கள் கிழமை அதிகாலை அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார்.

சாமி கும்பிட்ட பின் இருவரும் கோவிலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காருடன் காத்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல், சந்திரய்யாவை தள்ளிவிட்டு ஷாலினியை காரில் கடத்தி சென்றனர். மகளை கடத்தி செல்பவர்களை தடுக்க முயன்றும் சந்திரய்யாவால் முடியவில்லை. பிறகு பைக்கில் அவர்களை பாலோ செய்து விரட்டி பிடிக்க முடியவில்லை.

இதனால், நடந்த சம்பவம் குறித்து சந்தரய்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்ணின் தந்தையை தள்ளிவிட்டு பெண்ணை கடத்திச் செல்லும் பகீர் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஷாலினியை கடத்தி சென்ற நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட ஷாலினி திருமணக் கோலத்தில் பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தானும் ஜான் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், தங்கள் காதலை குடும்பத்தினர் ஏற்காததால் திட்டம்போட்டு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்

இந்த வீடியோ வெளியானதையடுத்து தந்தை சந்திரய்யா அதிர்ச்சியடைந்துள்ளார். காதலை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் கடத்தல் நாடகமாடி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kidnap, Lovers, Telangana