முகப்பு /செய்தி /இந்தியா / ஜாதி மறுப்பு திருமணம் செய்த மகளை பெற்றோரே கொன்று எரித்த கொடுமை!

ஜாதி மறுப்பு திருமணம் செய்த மகளை பெற்றோரே கொன்று எரித்த கொடுமை!

எரித்து கொலை செய்யப்பட்ட அனுராதா

எரித்து கொலை செய்யப்பட்ட அனுராதா

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரணய், அம்ருதா தம்பதியில், பிரணய், பட்டப்பகலில் நடுரோட்டில் ஆணவப்படு கொலை செய்யப்பட்டார். இதேபோல் மீண்டும் ஒரு ஆணவக்கொலை தெலுங்கானவில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

தெலங்கானாவில் காதல் திருமணம் செய்ததற்காக பிரணய் கொல்லப்பட்டு சில மாதங்களே ஆனநிலையில், மேலும் ஒரு பெண்ணை பெற்றோரே கொலை செய்து உடலை எரித்து சாம்பலையும் கரைத்துவிட்டனர்

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்திலுள்ள தலமடுகு கிராமத்தில்தான் இந்த ஆணவக்கொலை நிகழ்ந்துள்ளது. சக்தி அண்ணா என்பவரின் மகளான அனுராதா வேறு சாதி இளைஞரான லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரை கணவரிடமிருந்து பிரித்து பெற்றோர் அழைத்து வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, அனுராதாவை காணவில்லை என சக்தி அண்ணா கூறியுள்ளார். சந்தேகமடைந்த அங்கம்பக்கத்தினர், அங்குள்ள காட்டுப்பகுதியில் உடல் எரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு, ஜன்னாரம் மண்டலம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த போலீசார், அனுராதாவின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மகள் அனுராதா, வேறு சாதியைச் சேர்ந்த லட்சுமி ராஜனை காதலித்தது தனக்கு பிடிக்காததால் அவரை கண்டித்ததாக சக்தி அண்ணா கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த காதல்ஜோடிகள் கடந்த மூன்றாம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் லட்சுமி ராஜன் வீட்டில் இருந்த அனுராதாவை, சமாதானப்படுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தது ஏன் எனக் கேட்டு மகன்களுடன் சேர்ந்து அனுராதாவை தாக்கியதாகவும், ஒரு கட்டத்தில் அடி, உதை தாங்க முடியாமல் அனுராதா சனிக்கிழமை இரவு உயிழந்ததாகவும் சக்தி அண்ணா கூறியுள்ளார்.

இதனையடுத்து அனுராதாவின் உடலை சாக்குப்பையில் மூட்டைகட்டி அருகிலுள்ள வயலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உடலை எரித்து, யாருக்கும் தெரியாமல் சாம்பலை அருகில் இருக்கும் நீர் நிலையில் கரைத்து வீட்டுக்கு சென்று விட்டதாக சக்தி அண்ணா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, முதற்கட்டமாக அனுராதாவின் தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, காதலை ஏற்க கட்டாயப்படுத்துவதாக, லட்சுமி ராஜன் மீது புகார் கொடுக்கும் படி, அனுராதாவை, அவரது பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது அனுராதாவிடம் விசாரணை நடத்திய போலீசார், மகளை காதலனிடமிருந்து பிரிப்பதற்காக பெற்றோர் ஆடிய நாடகத்தை தெரிந்துகொண்டு, அனுராதாவின் பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தங்களுக்கு பெற்றோர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் தனது பெற்றோரே காரணம் என்று அனுராதா இறப்பதற்கு முன் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆடியோவும் கொலைக்கு ஆதாரமாக விளங்கியதால், அனுராதாவின் குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரணய், அம்ருதா தம்பதியில், பிரணய், பட்டப்பகலில் நடுரோட்டில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் மீண்டும் ஒரு ஆணவக்கொலை தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also see...

First published:

Tags: Honor killing, Telangana