முகப்பு /செய்தி /இந்தியா / வீடியோ: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்விக்கு நக்கலாக பதில் கொடுத்த டி.ஆர்.எஸ் கட்சி!

வீடியோ: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்விக்கு நக்கலாக பதில் கொடுத்த டி.ஆர்.எஸ் கட்சி!

கேஸ் சிலிண்டரில் பிரதமர் மோடியின் படம்

கேஸ் சிலிண்டரில் பிரதமர் மோடியின் படம்

கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அதன் விலையையும் சேர்த்து அச்சிட்டு பதிலடி கொடுத்துள்ளது டி.ஆர்.எஸ் கட்சி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் ரேஷன் கடைகளில் ஏன் பிரதமரின் புகைப்படம் இல்லை என மத்திய நிதியமைச்சர் சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அதன் விலையையும் சேர்த்து அச்சிட்டு பதிலடி கொடுத்துள்ளது டி.ஆர்.எஸ் கட்சி.

நேற்று தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜஹீராபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கடைகளில் ஏன் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதாவது ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களுக்கு பெரும் பங்கை மத்திய அரசு வழங்குகிறது எனவும், கோரோனா பெருந்தொற்று காலங்களில் மத்திய அரசு இலவசமாக பொருட்கள் வழங்குவதையும் குறிப்பிட்டார்.

இதையும் வாசிக்க: ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் எங்கே? - கலெக்டரை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்

அப்போது அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம் பிரதமரின் புகைப்படத்தை வைக்கவும் உத்தரவிட்டார். இதற்கு ஏற்கனவே அம்மாநில தொழிற்துறை அமைச்சர் கே.டி.ஆர் பதிலளித்திருந்தார். அதில் நிதியமைச்சரின் இந்த செயல் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது ஐஏஎஸ் அதிகாரிகளில் உழைப்பை அவமதிக்கும் செயல் என கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர்களில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டி விநியோகித்து வருகிறது டி.ஆர்.எஸ் கட்சி. அதில் பிரதமர் சிரித்து கொண்டிருப்பது போலவும் மேலே கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1105 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வை விமர்சனம் செய்யும் விதமாக டி.ஆர்.எஸ் கட்சி இவ்வாறு பரப்புரை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Telangana, TRS, Viral Video