ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேசிய கட்சியை தொடங்கும் சந்திரசேகர ராவ்... குவார்ட்டர், கோழியை விநியோகித்த கட்சி தொண்டர்கள்

தேசிய கட்சியை தொடங்கும் சந்திரசேகர ராவ்... குவார்ட்டர், கோழியை விநியோகித்த கட்சி தொண்டர்கள்

பிராய்லர் கோழி, குவார்ட்டர் இலவசமாக விநியோகிக்கப்படும் காட்சி

பிராய்லர் கோழி, குவார்ட்டர் இலவசமாக விநியோகிக்கப்படும் காட்சி

மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு நகர்வதால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உயிருள்ள பிராய்லர் கோழி மற்றும் குவார்ட்டரை விநியோகித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

  ஆந்தில் கே. சந்திர சேகரராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு ஆட்சியில் உள்ளது. மாநில அரசியலில் தீவிரம் காட்டி வந்த சந்திர சேகர ராவ் தற்போது தேசிய அரசியலில் நுழைவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.

  கடந்த சில மாதங்களாக மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை சந்திர சேகர ராவ் கடுமையாக விமர்சித்து வந்தார். இதேபோல அவரது கட்சி நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் அக்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இருக்கும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பதிவிட்டு வந்தனர்.

  இந்நிலையில் சந்திரசேகர ராவ் தேசிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. பெரும்பாலும் பாரதிய ராஷ்டிரிய சமிதி என்றே பெயர் அமையக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  வயது வெறும் நம்பர் தான்... ரம்யா கிருஷ்ணன் படங்களைப் பார்த்தால் புரியும்!

  மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு நகர்வதால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தேசிய கட்சி அறிவிக்கப்படுவதை முன்னிட்டு தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான கே.டி. ராமாராவ் ஆகியோரின் பேனர்கள் பரவலாக வைக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் உற்சாக மிகுதி காரணமாக வாரங்கல் பகுதியில் பொதுமக்களுக்கு பிராய்லர் கோழி மற்றும் குவாட்டர் மதுபானங்கள் இன்று விநியோகிக்கப்பட்டது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகி ராஜனல ஸ்ரீஹரி இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.

  அசுரன் படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு… ட்ரெண்டிங் செய்யும் தனுஷ் ரசிகர்கள்

  இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பிராய்லர் கோழி மற்றும் குவாட்டரை கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வாங்கிச் செல்லும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

  Published by:Musthak
  First published:

  Tags: Telangana