பெண் தாசில்தாரை எரித்துக்கொன்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

பெண் தாசில்தாரை எரித்துக்கொன்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!
கொல்லப்பட்ட தாசில்தார் மற்றும் சுரேஷ்
  • News18
  • Last Updated: November 7, 2019, 11:04 AM IST
  • Share this:
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அப்துல்லாபூர்மேட் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் அங்கு தாசில்தாராக பணியாற்றி வந்த விஜயா ரெட்டி என்பவரை அதே பகுதியை சேர்ந்த விவசாயியான சுரேஷ் என்பவர் கடந்த 4-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.

15 நாட்களாக தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் விவசாய நிலம் ஒன்றை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி வருவாய் துறையினர் பட்டா புத்தகம் வழங்கியது பற்றி தாசில்தாரிடம் முறையிட்டார்.
சம்பவம் நடந்த அன்று மதியம் தாசில்தார் அலுவலகத்திற்குள் அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ் திடீரென்று தாசில்தார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.


இது தொடர்பாக விவசாயி சுரேஷ் ஏற்கனவே அப்துல்லாபூர்மேட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் ரங்கா ரெட்டி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சம்பவத்தில் சுரேஷ் 60 சதவிகித தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சரணடைவதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

தன்னுடைய நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் வழங்கிய விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டுமென்ற வருவாய்த்துறை அதிகாரிகளும் வேண்டிக்கொண்டேன்.

Loading...

ஆனால் தாசில்தாரிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே தயாராக திட்டம்போட்டு எடுத்துச்சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தேன் என்று சுரேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே, வட்டாட்சியரை காப்பாற்ற முயன்ற அவரது கார் டிரைவரும் தீக்காயம் அடைந்து நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: November 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...