காங்.ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி அறிவிப்பு!

பிரதமர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.

காங்.ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி அறிவிப்பு!
சந்திரசேகர் ராவ்
  • News18
  • Last Updated: May 15, 2019, 11:55 AM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவுபெற்று ஆட்சியமைப்போம் என்று சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துள்ளது.

தேசிய அளவில், காங்கிரஸ், பாஜக கூட்டணிக்கு மாற்றாக, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், தெலங்கானா முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.


இந்த நிலையில், அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபித் ரசூல் கான் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மூன்றாவது அணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவுகோரி ஆட்சியமைப்போம் என்றார்.

எனினும், பிரதமர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்துப் பேச சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.Also see...

First published: May 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading