ஹோம் /நியூஸ் /இந்தியா /

முதல்வர் வீடு முற்றுகை.. ஆந்திர முதல்வரின் தங்கையை காரோடு இழுத்துச்சென்ற போலீஸ்.. தெலங்கானாவில் பரபரப்பு!

முதல்வர் வீடு முற்றுகை.. ஆந்திர முதல்வரின் தங்கையை காரோடு இழுத்துச்சென்ற போலீஸ்.. தெலங்கானாவில் பரபரப்பு!

ஷர்மிளா

ஷர்மிளா

தாக்குதலுக்கு உள்ளான காருடன் ஹைதராபாத்தில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஷர்மிளா நேற்று புறப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலங்கானா முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிடச் சென்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டு, காருடன் இழுத்துச் சென்று கைதுசெய்யப்பட்ட ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார். தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் அரசைக் கண்டித்து, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வாராங்கல் பகுதியில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஷர்மிளா, அந்த தொகுதியின் டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் கட்சியினர், ஷர்மிளாவின் கார் மற்றும் வாகனங்களைத் தாக்கினர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான காருடன் ஹைதராபாத்தில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஷர்மிளா நேற்று புறப்பட்டார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியபோதும், காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனால், ஷர்மிளா அமர்ந்திருந்த காரை, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, பாத யாத்திரைக்கான அனுமதி ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து ஷர்மிளா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, பாத யாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

First published:

Tags: Telangana