நாளை தேர்தல் - தெலுங்கானாவில் காங். பிரமுகர் வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் வரதன்னாபேட் தொகுதியிலுள்ள காங்கிரஸ் பிரமுகர் வீட்டிலிருந்து காவல்துறையினர் 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 2:29 PM IST
நாளை தேர்தல் - தெலுங்கானாவில் காங். பிரமுகர் வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்
தெலுங்கானா மாநிலம் வரதன்னாபேட் தொகுதியிலுள்ள காங்கிரஸ் பிரமுகர் வீட்டிலிருந்து காவல்துறையினர் 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
Web Desk | news18
Updated: December 6, 2018, 2:29 PM IST
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரதன்னாபேட்டை பகுதியில் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் 3 கோடி ரூபாயை போலீசார், அவர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவல் மூலம் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் பணம் நடமாட்டத்தை தடுக்க மாநிலம் முழுவதும் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றுவரை முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 109.7 கோடி ரூபாய் பணம், 10 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து லட்சத்து 13 ஆயிரத்து 216 லிட்டர் மது வகைகள், 8 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.இன்று தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வரதன்னாபேட் தொகுதிக்குட்பட்ட காஜி பேட்டையில் காங்கிரஸ் தொண்டர் அம்ருதாராவ் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாயை போலீசார் ரகசிய தகவல் மூலம் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

Also see:
Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...