காதல் மனைவியை கொலை செய்ய கத்தியுடன் வந்த நபர் கைது

Web Desk | news18
Updated: July 14, 2019, 10:43 AM IST
காதல் மனைவியை கொலை செய்ய கத்தியுடன் வந்த நபர் கைது
Web Desk | news18
Updated: July 14, 2019, 10:43 AM IST
காதல் மனைவியை கொலை செய்து பழிவாங்குவதற்காக கத்தியுடன் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பன்லகுடாவில் வசித்து வருபவர் சுவர்ணா. இவரும் ராஜேந்திரன் நகரை சேர்ந்த சாய் கிரண் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சில மாதங்களிலேயே இரண்டு பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது சுவர்ணா, அவரது தாய் ஆகியோரை சாய் கிரண் தாக்கினார்.  இதையடுத்து சாய்கிரனை  கைது செய்த போலீசார் 6 மாதம் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சாய்கிரண் மனைவியை கொலை செய்து பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என திட்டம் தீட்டினார். இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் சுவர்ணா தப்பித்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை மது அருந்திய சாய்கிரண் சுவர்ணாவிற்கு போன் செய்து ”உன்னை இன்று கொலை செய்வேன்” என்று மிரட்டல் விடுத்தார்.

கணவனின் மிரட்டல் பற்றி சுவர்ணா,  போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுவர்ணாவின் வீட்டின் அருகே கொலை செய்வதற்காக கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு சாய்கிரண் நின்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த போலீஸ், சாய்கிரணை மடக்கிப்பிடித்து அவர் சட்டையின் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
Loading...
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...