தெலங்கானாவில் மாயமான முதியவர் பாழடைந்த கிணற்றில் இருந்து உயிருடன் மீட்பு.. 3 நாள்கள் உணவின்றி தவிப்பு

தெலங்கானா

மூன்று நாள்களாக நாராயணன் கிணற்றுக்குள்ளே உணவு இல்லாமல் இருந்துள்ளார்.

  • Share this:
    தெலங்கானாவில் காணாமல் போன முதியவர் மூன்று நாள்களுக்கு பிறகு கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

    தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் வயது 80. கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி பக்கத்து ஊரில் ஒரு விசேஷத்துக்கு பங்கெடுக்க சென்றுள்ளார். திரும்பி வரும்வழியில் பாதை மாறி ஒரு பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளார் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த பகுதியில் நாராயணனின் குரலை கேட்க ஆள் இல்லை. மூன்று நாள்களாக நாராயணன் கிணற்றுக்குள்ளே உணவு இல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையில் நாராயணனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    Also Read: காவல் உதவி ஆய்வாளர் மீது சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா புகார்

    இந்நிலையில் ஜூலை 1-ம் தேதி கிணற்றுக்குள் இருக்கும் நாராயணின் குரல் அப்பகுதியில் வயல்வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த ஒருவரின் செவிக்கு எட்டியுள்ளது. அந்த நபர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளார். ஒரு வயதான முதியவர் கிணற்றிக்குள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மூன்று நாள்களாக கிணற்றில் இருந்த நாராயணனை பத்திரமாக மீட்டனர். உடனடியாக அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் எந்த காயங்களும் இல்லை.தற்போது அவர் நலமாக உள்ளார்.

    Also Read: வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் குடும்பத்தினர் சிக்கியது எப்படி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

    இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள். “சித்திபேட் டவுண் சென்று விட்டு திரும்பும் வழியில் அவரை பாதை மாறிச்சென்று பாழடைந்த கிணற்றில் விழுந்துவிட்டார். நல்லவேளையாக அவருக்கு காயங்கள் எதும் ஏற்படவில்லை. மூன்று நாள்களாக கிணற்றில் உணவு இல்லாமல் இருந்துள்ளார். கிணற்றின் ஒரு பகுதியில் இருந்த சிறிதளவு தண்ணீரை குடித்துக்கொண்டு உயிர்வாழ்ந்துள்ளார். தற்போது அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.” என்றனர். நாராயணின் குடும்பத்தினர் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: