ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிபிஐ-க்கு இனி ஒத்துழைப்பு கிடையாது - தெலுங்கானா அரசு அதிரடி

சிபிஐ-க்கு இனி ஒத்துழைப்பு கிடையாது - தெலுங்கானா அரசு அதிரடி

சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற டெல்லி பாஜக நினைப்பதாகவும், ஆப்ரேஷன் லோட்டஸ்-ன் விளைவாகவே தற்போதைய சம்பவம் நடந்ததாகவும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றஞ்சாட்டியிருந்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Telangana, India

  சிபிஐ புலானய்வு அமைப்புக்கு வழங்கிய, பொது ஒத்துழைப்பை (General Consent) திரும்ப பெறுவதாக தெலுங்கானா மாநிலம் அறிவித்துள்ளது. இதன்மூலம், சிபிஐ விசாரணைக்கு வழங்கிய ஒப்புதலை திரும்ப பெற்றுள்ள மாநிலங்களின் பட்டியலில் 9வது இடத்தில் தெலுங்கானா  இடம்பெற்றுள்ளது.

  முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் முங்கொடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் (Mungode) கோமதி ரெட்டி அக்கட்சியில் இருந்தும், எம்எல்ஏ பதிவியில் இருந்தும் விலகினார்.இந்த தொகுதிக்கான  இடைத்தேர்தல் வரும் 3ம் தேதி நடைபெற இருக்கிறது. தெலுங்கானா சட்டப்பேரவை  அடுத்தாண்டு தேர்தலை சந்திக்க இருக்கும்  நிலையில், இந்த இடைத்தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களை  பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சித்தாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத்தின் ஜனநாயக மாண்பைக் குழைத்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற டெல்லி பாஜக நினைப்பதாகவும், ஆப்ரேஷன் லோட்டஸ்-ன் விளைவாகவே தற்போதைய சம்பவம் நடந்ததாகவும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

  இந்நிலையில், இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும், நியாயமான முறையில் வழக்கு விசாரணை நடைபெற  சிபிஐ புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கூறி பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

  இந்த வழக்கு விசாரணையின் போது தான்,  சிபிஐ புலானய்வு அமைப்புக்கு வழங்கிய பொது ஒத்துழைப்பை (General Consent) தெலுங்கானா அரசு கடந்த ஆகஸ்ட் மாதமே திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அப்போதே பொது வெளியில் வெளியிடப்பட வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்கதேர்தல் வெற்றிக்காகதான் பொது சிவில் சட்டம் வாக்குறுதி : பாஜகவை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்!

  நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அதிகாரவரம்பு டெல்லி சிறப்பு காவல் படை சட்டத்தின் மூலம் (DSPE Act, 1946) வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் ஒன்றிய  ஆட்சிப்பகுதிகளின் காவல்துறைக்கு இருப்பதை ஒத்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும்  சி.பி.ஐ-க்கு  வழங்குகிறது. டெல்லியைத் தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, பொது ஒப்புதல் அளிப்பது அவசியம்.

  இதையும் வாசிக்க கங்கனா பாஜகவில் சேரலாம்... ஆனால்..? - தேசிய தலைவர் நட்டா வைத்த நிபந்தனை!

  பொது ஒப்புதலை  திரும்ப பெறும் பட்சத்தில், ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக, மாநில அரசு அளிக்கும் ஒப்புதல் அடிப்படையில் புலனாய்வை சிபிஐ மேற்கொள்ளும்.

  கடந்த 2015ம் ஆண்டு முதல், மிசோரம், மேற்கு வங்கம், சட்டிஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தாங்கள் வழங்கிய பொது ஒப்புதலை திரும்ப பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: BJP, CBI, Telangana