தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு மறுத்த காதலியை அவரது காதலனே வன்கொடுமை செய்து கால்வாயில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீசைலன் (23) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இருவரின் காதலும் வீட்டிற்கு தெரியவர பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் பேச்சை கேட்ட அந்தப்பெண்ணும் ஸ்ரீசைலனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி காதலியை செல்போனில் அழைத்த ஸ்ரீசைலன் 5 ஆண்டுகளாக காதலித்துவிட்டு இப்படி திடீரென பேசாமல் போவது சரியா என்று கேட்டுள்ளார். மேலும் இறுதியாக ஒருமுறை சந்தித்து பேசிவிட்டு பிரிந்துவிடலாம் வா என மாணவியை அழைத்துள்ளார்.
இதை நம்பி அவரும் தனது காதலனுடன் சென்றுள்ளார். ஸ்ரீசைலன் அந்த பெண்ணை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது காதலித்துவிட்டு ஏமாற்றி செல்கிறாயா என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்தப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப்பெண் அழுது புலம்பியுள்ளார் .
மேலும் போலீசாருக்கு ஃபோன் செய்ய போவதாக கூறி போன் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலன் அவரை கல்லால் அடித்தும் துப்பட்டாவல் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.
மேலும் தனது உறவினர் சிவா என்பவரை வரவழைத்து இளம்பெண்ணின் உடலை அருகில் இருந்த கால்வாயில் குழித்தோண்டி புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் மகளை காணவில்லை என்று பெற்றோர் தேடத்தொடங்கியுள்ளனர். அத்துடன் தனது காதலனுடன் செல்கிறேன் என்று மாணவி அனுப்பியது போன்று ஒரு குறுந்தகவலும் பெற்றோருக்கு வந்துள்ளது.
இதையும் வாசிக்க: வட சென்னை பட பாணியில் சிறைச்சாலைக்குள் கஞ்சா கடத்த முயன்ற கைதி!
இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோரு போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளனர். ஸ்ரீசைலன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடினர். பின்னர் காட்டுப்பகுதியில் நண்பருடன் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவிகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீசைலன் கொடுத்த தகவலை வைத்து புதைக்கப்பட்ட மாணவியின் சடலத்தை போலீசார் மீட்டனர்.இதனையடுத்து ஸ்ரீசாலன் அவருக்கு உதவியாக இருந்த உறவினர் சிவா ஆகியோரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Girl Murder, Rape case, Telangana