ஆற்றில் டிக்டாக் வீடியோ... தண்ணீர் அடித்துச் சென்றதில் இளைஞர் உயிரிழப்பு

news18
Updated: September 22, 2019, 3:15 PM IST
ஆற்றில் டிக்டாக் வீடியோ... தண்ணீர் அடித்துச் சென்றதில் இளைஞர் உயிரிழப்பு
உயிரிழந்த இளைஞர்
news18
Updated: September 22, 2019, 3:15 PM IST
அதிக தண்ணீர் ஓடிய தடுப்பனையில் விபரீதம் அறியாமல் டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள பிரேம்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு நண்பர்களுடன் அருகிலுள்ள கப்பலால் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார்.

முன்னதாக மூன்று பேரும் தடுப்பணையில் இருந்து பாய்ந்து வரும் நீரில் நின்று டிக் டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்து மூன்று பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.


செய்வதறியாமல் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு பேர் பெரும் சிரமத்திற்கு இடையே உயிருடன் கரை ஏறிய நிலையில் தினேஷ் என்பவர் மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தேடியும் தினேஷ் கிடைக்கவில்லை.

தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார். அவரது நண்பர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் டிக் டாக் வீடியோ விவகாரம் வெளிவந்துள்ளது.

Also see..

Loading...First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...