முகப்பு /செய்தி /இந்தியா / பொதுமக்கள் செல்லும் சாலையில் கண்ணி வெடி.. 20 அடி உயரத்திற்கு எழுந்த புகை.. தெலங்கானாவில் பரபரப்பு..!

பொதுமக்கள் செல்லும் சாலையில் கண்ணி வெடி.. 20 அடி உயரத்திற்கு எழுந்த புகை.. தெலங்கானாவில் பரபரப்பு..!

கண்ணிவெடிகள் செயலிழப்பு

கண்ணிவெடிகள் செயலிழப்பு

தெலங்கானா மாநிலத்தில் பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் 20 கிலோ எடைகொண்ட கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலம் கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள செலரா மண்டல பகுதியில் உள்ள சாலையில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சாலையில் 20 கிலோ எடையில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அதனை வெடிக்கச் செய்தனர்.

அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்து 20 அடி உயரத்துக்கு புகை பரவியது. போலீஸாரை குறிவைத்து கண்ணி வெடிகளை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் புதைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Landmines, Telangana