• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தெலங்கானாவில் 150 பேரை அழைத்து பிறந்தநாள் கொண்டாடிய வைரவியாபாரி கொரோனா பாதித்து உயிரிழப்பு

தெலங்கானாவில் 150 பேரை அழைத்து பிறந்தநாள் கொண்டாடிய வைரவியாபாரி கொரோனா பாதித்து உயிரிழப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • Share this:
    தெலங்கானாவில் 150 பேரை அழைத்து பிறந்தநாள் கொண்டாடிய வைர வியாபாரி கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இதுவரையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வைர வியாபாரி ஒருவர், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியுள்ளார். அந்த விழாவில் அவருடைய அழைப்பை ஏற்று 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஏராளமான வைர வியாபாரிகளும், தங்க வியாபாரிகளும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

    பிறந்தநாள் விழா முடிந்து, மூன்று நாள்கள் கழித்து அவருக்கு உடல்நிலைப் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார். அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நகைக்கடை உரிமையாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உயிரிழந்தார்.

    தெலங்கானா அரசியல்வாதி உள்பட அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: