தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர
மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஹைதராபாத் வந்திருந்தனர்.
இரண்டு நாள் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பெரும் சக்தியாக மாற்ற முக்கிய யூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தை நோட்டமிட்டு அங்கு புகைப்படங்களை எடுத்த தெலங்கானா மாநில உளவுத்துறை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் கட்சியில் எந்த ரகசியமும் இல்லை. நாங்கள் ஜனநாயகப்பூர்வமான கட்சி. இது ஒன்றும் குடும்ப கட்சி அல்ல. இந்த சூழலில் அத்துமீறி எங்கள் கூட்டத்தில் அந்த நபர் நுழைந்துள்ளார். இருந்தாலும் எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்விற்கு தேவைப்பட்டால் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அனுப்பி வைக்கிறோம். ஆனால், கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அதை நோட்டமிடுவது தவறானது என்றார்.இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், எங்கள் குடும்பம் வெளிப்படையானது. எனவே, எங்கள் நடவடிக்கையில் எந்த ரகசியமும் இல்லை என்றுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.
இதையும் படிங்க:
நீதித்துறை, நீதிபதிகளை விமர்சிப்பது நல்லதல்ல - உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா
அதேவேளை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேரில் வரவேற்கவில்லை. அன்மை காலமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும், பாஜகவுக்கும் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தவிர்த்து வருகிறார். அம்மாநிலத்தில் டிஆர்எஸ் மற்றும் பாஜக இடையே காரசாரமான மோதல் போக்கு நிலவிவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.