தெலுங்கானா ஆணவக் கொலை: 'பாபநாசம்' பட பாணியில் செயல்பட்டதாக தந்தை வாக்குமூலம்

news18
Updated: September 20, 2018, 2:26 PM IST
தெலுங்கானா ஆணவக் கொலை: 'பாபநாசம்' பட பாணியில் செயல்பட்டதாக தந்தை வாக்குமூலம்
படுகொலை செய்யப்பட்ட பிரணாய்- அவரது மனைவி அமிர்தவர்ஷிணி- தந்தை மாருதிராவ்
news18
Updated: September 20, 2018, 2:26 PM IST
தெலுங்கானாவை அதிர வைத்த ஆணவக் கொலையில் கைதான அமிர்தவர்ஷிணியின் தந்தை, இந்த வழக்கில் தான் சிக்காமல் இருப்பதற்காக, பாபநாசம் படப் பாணியில் செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பாபநாசம் படத்தில் தனது மகளை பாலியல் தொந்தரவு செய்ததால் கொலை செய்யப்பட்ட இளைஞனின் காரை பெண்ணின் தந்தை ஆற்றில் தள்ளி விட்டு தடயங்களை அழித்து, தந்தை குடும்பத்துடன் சகஜமாக பொது இடங்களில் திரியும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதேபோன்று தெலுங்கானாவில் நடந்த கொலையில், குற்றவாளி செயல்பட்டுள்ளார் என்கின்றனர் போலீசார்.

தெலுங்கானா மாநிலம் மிரியாலகுடாவைச் சேர்ந்தவர் அமிர்தவர்ஷிணி. இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரணாய் நாயக்கைத் திருமணம் செய்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். தனது மகள் வேறு ஜாதி இளைஞரைத் திருமணம் செய்ததால் தந்தை மாருதிராவ் ஆத்திரமடைந்தார்.


கடந்த 13-ம் தேதி, அமிர்தவர்ஷிணி தனது கணவனுடன் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தபோது அடையாளம் தெரியாத நபர் பிரணாய் நாயக்கின் கழுத்தில் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இந்த வழக்கில் ஐந்தே நாட்களில், மாருதிராவ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தான் சிக்கி விடக் கூடாது என்பதற்காக மாருதிராவ், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். பாபநாசம் படத்தில் வருவதுபோல், சம்பவம் நடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே அவர் மிரியாலகுடாவை விட்டு வெளியேறி விட்டார். மாவட்ட இணை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் வருவாய் துறை அலுவலர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் வெமுலபள்ளி துணை எஸ்பியையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். பல்வேறு இடங்களுக்குத் தனது காரில் அனைவரும் பார்க்கும் வகையில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் போலீசார் அவரைப் பின்தொடர்ந்து நோட்டமிட்டதில் அவர்களது சந்தேகம் வலுவடைந்தது. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

Loading...

பிரணாய் நாயக்கின் கொலை தெலுங்கானாவை உலுக்கியுள்ள நிலையில், போலீசார் கொலையின் பின்னணியைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளனர்.
First published: September 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...