• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தெலங்கானாவில் பழங்குடி மக்களின் உடை அணிந்து தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழிசை சௌந்தர்ராஜன்

தெலங்கானாவில் பழங்குடி மக்களின் உடை அணிந்து தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சவுந்தர்ராஜன்

தமிழிசை சவுந்தர்ராஜன்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பழங்குடியின மக்களின் உடையை அணிந்துமகிழ்ந்தார்.

  • Share this:
    தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் உள்ளார். கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்புசி செலுத்த வேண்டும் என்று இலக்கும் நிர்ணயித்துள்ளார். அதற்காக நடவடிக்கைகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது தடுப்பூசி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்நிலையில், தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

    தடுப்பூசி போடும் தமிழிசை சௌந்தரராஜன்


    அதன்படி, தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மகேஷ்வரம் மண்டல், கே.சி.மண்டா என்ற கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்த கிராமத்தை 100% தடுப்பூசிசெலுத்தப்பட்ட கிராமமாக மாற்றவும் அங்கு வாழும் மக்களுடன் தனது இரண்டாவது கொரோனா தடுப்பூசியை தமிழிசை சௌந்தரராஜன் இன்று செலுத்திக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, அந்த பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த மக்களை மகிழ்வித்தார். அந்த மக்களுடன் மக்களாக இருந்து அவருடைய இரண்டாவது கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: