தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், வேறு மாநிலத்திற்கு மாற்றம் என்ற தகவல் உண்மையல்ல என்று தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதலில் மாநில அரசுடன் இணக்கமாக தமிழிசை இருந்தநிலையில், நாட்கள் செல்ல செல்ல மாநில அரசு- ஆளுநர் இடையேயான விரிசல் அதிகரிக்கக் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை வாசிப்பது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரை புறக்கணிக்கப்பட்டது. இதற்கு தமிழிசையும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதேபோல், யாத்ரியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நடைபெற்ற திறப்பு விழாவிலும் தமிழிசை சௌந்தரராஜன் புறக்கணிக்கப்பட்டார். ஆளுநர்- தெலங்கானா அரசு இடையேயான இந்த விரிசல் அதிகரித்த நிலையில், அவர் திடீர் பயணமாக டெல்லி சென்றார். எனவே, தமிழிசை சௌந்தராஜன் கேரளா அல்லது பாஜக ஆளுநர் பிற மாநிலங்களுக்கு மாற்றப்படலாம் என்று தகவல் வெளியானது.
இது தொடர்பாக டெல்லியில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், பிற மாநிலத்திற்கு மாற்றப்படுவதாக வரும் தகவல் உண்மையல்ல, என கடமையை ஆற்றியதால் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த எம்.என்.சி.யை நான் ஏற்றுகொள்ளவில்லை என்பதால் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக தனிப்பட்ட காழ்ப்புணர்வு வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க: பில் கட்டாததால் 3 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் கட் - புகழ்பெற்ற அஜந்தா குகைக்கு நேர்ந்த அவலம்
வேறு எந்த விதத்திலும் மாநில அரசுக்கு எதிராக நான் செயலாற்றவில்லை. சமீபத்தில் கூட பழங்குடி மக்களை சந்தித்து வந்தேன். ஆளுநர்கள் தங்களது கடமையையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பின்பற்றும்போது இதுபோன்ற காழ்ப்புணர்வு வரக்கூடாது என்று நான் எண்ணுகிறேன் என கூறினார்.
மேலும் படிக்க: 10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைக்காக காஷ்மீர் PhD மாணவர் கைது
தமிழகத்தில் ஆளுநர் தமிழக அரசு இடையேயான மோதல்போக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழகம் குறித்து கருத்து கூறவில்லை, ஆனால், புதுச்சேரியிலும் இதேபோன்ற சூழலை நான் எதிர்கொண்டேன். தேனீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தேன். தயவு செய்து அழைப்பை அழைப்பாக மட்டும் பாருங்கள். அழைப்புகளை அரசியலாக பார்க்காதீர்கள். காமராஜர் அண்ணாவை மதித்தார், அண்ணாவை காமராஜர் மதித்தார், பெரியாரை காமராஜர் மதித்தார். அப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் சுமுகமாக வாழ்ந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Governor, Tamilisai Soundararajan, Telangana