முகப்பு /செய்தி /இந்தியா / பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தராத ஆளுநர் தமிழிசை.. நீதிமன்றத்தை நாடும் தெலங்கானா அரசு..!

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தராத ஆளுநர் தமிழிசை.. நீதிமன்றத்தை நாடும் தெலங்கானா அரசு..!

ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசை

சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்துகொண்ட குடியரசு தின விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் மாநில அரசிற்கும் ஆளுநர் தமிழிசைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆளுநர் தமிழிசை தனது நிர்வாகத்தில் தலையிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். மேலும் சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்துகொண்ட குடியரசு தின விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலங்கானாவில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையில் வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக பட்ஜெட் தயாரிக்கப்பட்டு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி மாநில அரசுக்கு ஆளுநர் மாளிகை கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், ஆளுநர் உரையாற்றுவதற்கும், பட்ஜெட்டுக்கும் தொடர்பு இல்லை என்று சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி அரசு தெரிவித்துள்ளது. பட்ஜெட் தொடர்பாக ஆளுநரை தலைமைச் செயலாளரும், நிதித் துறைச் செயலாளரும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாட தயாராக இருப்பதாகவும் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.

First published:

Tags: Chandrashekar Rao, Tamilisai, Tamilisai Soundararajan