முகப்பு /செய்தி /இந்தியா / வெயில் தாக்கம் எதிரொலி - இன்று முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் - தெலுங்கானா அரசு அறிவிப்பு

வெயில் தாக்கம் எதிரொலி - இன்று முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் - தெலுங்கானா அரசு அறிவிப்பு

பள்ளி

பள்ளி

கடந்த சில நாள்களாக தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு 36 முதல் 38 டிகிரி என்று பதிவாகி வருகின்றது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

தெலுங்கானா மாநிலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதை அடுத்து, மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் அரை நாள் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

சமீப காலமாகவே நாட்டின் பல பகுதிகளில் காலநிலை என்பது சராசரி அளவை விட அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாள்களாக தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு 36 முதல் 38 டிகிரி என்று பதிவாகி வருகின்றது. அதீத வெயிலால் பள்ளி மாணவர்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குனரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்  "மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 24, 2023 வரையிலான கடைசி வேலை நாள் வரை அரை நாட்கள் மட்டும் நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அரசுபள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரை அரை நாள் பள்ளிகளாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு மதியம் 12:30 மணிக்கு வழங்கப்படும்.

இருப்பினும், பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்கான சிறப்பு வகுப்புகள் தொடரும். அதேபோல 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: School, Summer