சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெலங்கானாவில் இன்று பெண்களுக்கு விடுமுறை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெலங்கானாவில் இன்று பெண்களுக்கு விடுமுறை

மாதிரிப் படம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெலங்கானாவில் பெண்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பெண்கள் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

  இந்தநிலையில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தெலங்கானாவின் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ்வின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

  இதுதொடர்பாக தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை’ என்று குறிப்பிடப்படுள்ளது. மேலும், ‘ஆண்களுடன் அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போடுகின்றனர். சிறந்தும் விளங்குகின்றனர். மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள், வாய்ப்பு வழங்கப்பட்டால் பல ஆச்சர்யங்களைச் செய்வார்கள் என்று சந்திரசேகர ராவ் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: