No Lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை- ஜூலையில் பள்ளிகள் திறப்பு: தெலங்கானா அரசு அறிவிப்பு!

காவல்துறையினர்

தெலங்கானாவில் இரவு ஊரடங்கு உட்பட அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும்  நாளை முதல்  விலக்கிக் கொள்வதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் தாங்கள் பிறப்பித்த ஊரடங்களில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.  அந்த வகையில், தெலங்கானா மாநிலத்திலும் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  நேற்றைய தினம் அரசு வெளியிட்ட குறிப்பில் புதிதாக  1,417 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

தெலங்கானாவில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று  அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து  பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தெலங்கானாவில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு உட்பட அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஜூலை ஒன்றாம்தேதி முதல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப் படம்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா 2வது அலையின்போது விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் விலகிக்கொண்ட முதல் மாநிலம்  தெலங்கானா ஆகும்.

டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும்  கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதேவேளையில், கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால், மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Published by:Murugesh M
First published: