Home /News /national /

தெலங்கானாவில் பணமழை கொட்டுவதால் விதிகளை மாற்றிய தேர்தல் ஆணையம்!

தெலங்கானாவில் பணமழை கொட்டுவதால் விதிகளை மாற்றிய தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

பரம எதிரியான தெலுங்கு தேசம் கட்சியுடன் ராகுல் கூட்டணி வைத்ததில் ஏற்கனவே கொதித்துப்போயுள்ள தெலங்கானா காங்கிரஸார், அசாருதீனை மாநில செயல் தலைவராக நியமித்ததில் மேலும் கடுப்பாகியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
தெலங்கானா தேர்தலில் பணமழை கொட்டுவதால் விதிகளையே தேர்தல் ஆணையம் மாற்றியது. இருந்த போதிலும் அரசியல்வாதிகள் திருந்தியபாடாக இல்லை என்பதை காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி நிரூபித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தெலங்கானாவில் 80 கோடி ரூபாயை போலீஸாரும், பறக்கும் படையினரும் பறிமுதல் செய்ததால். அதிர்ந்துபோன தேர்தல் ஆணையம், தினசரி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணத்தை வங்கியில் இருந்து எடுக்கக்கூடாது என விதிகளையே மாற்றியது.

இருப்பினும், தெலங்கானா அரசியல்வாதிகள் திருந்துவதாக தெரியவில்லை. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தங்கு தடையின்றி தொடர்வதை ஒரு வீடியோ பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.

தெலங்கானாவிலும், காங்கிரஸ் கட்சியில் குழப்பமோ குழப்பம். பரம எதிரியான தெலுங்கு தேசம் கட்சியுடன் ராகுல் கூட்டணி வைத்ததில் ஏற்கனவே கொதித்துப்போயுள்ள தெலங்கானா காங்கிரஸார், முன்னாள் எம்.பி.யும் கிரிக்கெட் வீரருமான அசாருதீனை மாநில செயல் தலைவராக நியமித்ததில் மேலும் கடுப்பாகியுள்ளனர்.

தெலங்கானாவில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அனைத்தும் சரியாகிவிடும் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.

தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், வாக்காளர்களை ஈர்க்க, விக்ரமாதித்தன் - வேதாளம் கதையில் வரும் விக்ரமாதித்த ராஜா போல், தேர்தல் ஆணையம் அதன் பணியை ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ராஜஸ்தானில் புஷ்கரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மணல் சிற்பத்தை ஆணையம் உருவாக்கியுள்ளது. இது வாக்குகளை அதிகரிக்குமோ இல்லையோ, பார்வையாளர்களை ஈர்க்கும் என்பது மட்டும் உறுதி.

Also See..

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: 5 State Election, Telangana Election

அடுத்த செய்தி