ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடிகார மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்...

குடிகார மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்...

கொலை

கொலை

Crime news: கோவிலுக்கு செல்வதாகக் கூறி அழைத்துச்சென்று கூலிப்படையினர் உதவியுடன் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Telangana, India

  தெலங்கானாவில் குடிக்கு அடிமையான மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொன்றதாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியை சேர்ந்தவர் ராம் சிங். அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவருக்கும் இவரது மனைவி ராணி பாய் என்பவருக்கும் 26 வயதான சாய் ராம் என்ற மகன் இருந்தார். குடி பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குடிப்பதற்கு பணம் தராவிட்டால் அவரது பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

  ராம் சிங் - ராணி பாய் தம்பதியின் இன்னொரு மகள் அமெரிக்காவில் உள்ள நிலையில் குடிகார மகனின் தொல்லை தாங்க முடியாத பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். ஆனால், அது பலனளிக்காமல் தொடர்ந்து குடிப்பதற்கு பணம் கேட்டு சாய் ராம் தனது பெற்றோரை தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 18ம் தேதி சூர்யபேட் எனும் பகுதியில்   சாய் ராமின்  சடலமாக மீட்கப்பட்டார்.

  பெற்றோர் காணாமல் போன தங்களது மகன் குறித்து எந்த புகாரும் காவல் நிலையத்தில் அளிக்காதது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சாய் ராம் தனது பெற்றோருடன் காரில் கடைசியாக பயணம் செய்தது தெரியவந்தது.  பெற்றோரின் கார் இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

  Also Read: ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் ஆத்திரம்.. இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

  போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது, தனது குடிகார மகனின் செயலால் ஆத்திரமடைந்திருந்த ராம் சிங் - ராணி பாய் தம்பதியினர் ராணி பாயின் சகோதர் சத்தியநாராயணன் என்பவரது உதவியோடு தனது மகனை கொல்ல கூலிப்படையை அணுகியுள்ளனர். அவர்களுக்கு முதலில் ஒன்றரை லட்சம் ரூபாயும் காரியத்தை முடித்தவுடன் ஆறரை லட்சம் ரூபாயும் தருவதாக பேசியுள்ளனர்.

  பின்னர், சத்தியநாராயணன் மற்றும் ரவி சிங், சாய் ராமை கோவிலுக்கு செல்வதாகக் கூறி அழைத்துச்சென்று கூலிப்படையினர் உதவியுடன் அவரை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Death, Murder