”வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் உள்ளது” என தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கான என ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி பின் தங்கியுள்ளது. சந்திரசேகர ராவ்வின் டி.ஆர்.எஸ் சுமார் 90 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் உத்தம குமார் ரெட்டி கூறுகையில், “வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்திருக்கும் என பெரும் சந்தேகம் உள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் கண்டிப்பாக ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கை எண்ணப்பட வேண்டும்.
ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை வேண்டும் என அனைத்து தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களும் தத்தமது தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க: சோனியா காந்தி - இந்தியாவின் மருமகள்
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.