முகப்பு /செய்தி /இந்தியா / தெலங்கானாவில் கொடியேற்றிய கவர்னர் தமிழிசை.. புறக்கணித்த முதல்வர் கேசிஆர்!

தெலங்கானாவில் கொடியேற்றிய கவர்னர் தமிழிசை.. புறக்கணித்த முதல்வர் கேசிஆர்!

கேசிஆர், தமிழிசை

கேசிஆர், தமிழிசை

தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் , ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் கொடி ஏற்றினார். இந்த நிகழ்வினை மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hyderabad, India

கொரோனா பரவல் இருப்பதால் குடியரசுத் தின நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று தெலங்கானா மாநில அரசு முடிவெடுத்தது. அரசின் முடிவை எதிர்த்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கட்டாயம் குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது.

இந்த சூழலில் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் குடியரசுதின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. அரசு தலைமை செயலாளர் மற்றும் மாநில காவல்துறை டிஜிபி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, RRR படத்தின் இசையமைப்பாளரும் கோல்டன் குளோப் விருது வென்றவருமான எம்.எம். கீரவாணிக்கு பரிசுகளை வழங்கினார்.

குடியரசு தின விழாவை தெலங்கானா முதலமைச்சர் புறக்கணித்தது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் என அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்,.

First published:

Tags: Chandrasekra Rao, Hyderabad, Tamilisai Soundararajan, Telangana