நடக்கவிருக்கும்
மழைக்கால கூட்டதொடரில்,
பாஜக அரசு கொண்டு வரும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்க்க, எதிர் கட்சிகள் ஒருமித்த குரல் குடுக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கேட்டுக்கொண்டிள்ளார்.
மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் (ஜூலை 18ம் தேதி) தொடங்கவுள்ளது. இதில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், பணவீக்கம், பொருளாதாரம் மற்றும் பிற பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பாஜக அல்லாத பிற கட்சி தலைவர்களிடம் நேற்று தொடர்புகொண்டு பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஜனநாயக விரோத போக்கை "அம்பலப்படுத்த" நாடு தழுவிய போராட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்காக அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்திர பிரதேச எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.
இதையும் படிங்க: மங்கிபாக்ஸ் தொற்று குழந்தைகளுக்கு பரவினால் பெரும் ஆபத்து - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!
மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருப்பதால், அவருக்கு நெருங்கியவர்களுடன் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடத்த வாரம் நரேந்திர மோடியை “பலவீனமான மற்றும் திறமையற்ற” பிரதமர் என்று விமர்சித்திருந்த சந்திரசேகர ராவ், மத்தியில் பாஜக அல்லாத அரசு வர வேண்டும் என கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் பல முக்கிய பிரச்சனைகளில் மோடி அரசை சந்திரசேகர ராவ் ஆதரித்துள்ளார் என்றபோதிலும் தற்போது அவர் பாஜக அரசை வீழ்த்த முக்கிய எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.