ஹோம் /நியூஸ் /இந்தியா /

உங்கள் சகோதரன் இங்கே இருக்கிறேன், ஹைதராபாத் உங்கள் இல்லம்... திருமா மீது பாசம் காட்டும் கேசிஆர்

உங்கள் சகோதரன் இங்கே இருக்கிறேன், ஹைதராபாத் உங்கள் இல்லம்... திருமா மீது பாசம் காட்டும் கேசிஆர்

கேசிஆர். திருமாவளவன்

கேசிஆர். திருமாவளவன்

கன்ஷிராம் மற்றும் பிபி மண்டல் ஆகியோருக்கு ஹைதராபாத்தில் சிலை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Hyderabad, India

  உங்கள் சகோதரன் இங்கே இருக்கிறேன். ஹைதராபாத் உங்கள் இல்லம். நீங்கள் எப்போது வேண்டுமானால் இங்கு வரலாம் என திருமாவளவனிடம் கூறியிருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர்.

  சமீப காலமாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் தெலங்கானா முதலமைச்சரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என மாற்றியுள்ளார். தேசிய அளவில் கட்சியை வளர்க்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

  அதற்கு சந்திரசேகர ராவ் அழைப்பின் பேரில், விசிக தலைவர் திருமாவளவன் ஹைதராபாத் சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அங்கு திருமாவளவனுக்கு தடபுடலான வரவேற்புகள் வழங்கப்பட்டன. காலை தெலங்கானா முதலமைச்சர் மாளிகையில் அவருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு பின்னர் பல்வேறு தேசிய தலைவர்களுக்கு திருமாவளவனை அறிமுகப்படுத்தி வைத்தார் கேசிஆர். அந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  அந்த நிகழ்ச்சியில் திருமாவளவனை சந்தித்த கேசிஆரின் மகனும் தெலங்கானா அமைச்சருமான கே.டி.ராமா ராவ், "நாம் எல்லோரும் ஒரே குடுபத்தைச் சார்ந்தவர்கள் தான் எனவும் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, இணைந்து செயல்படுவோம்" என கூறியுள்ளார்.

  இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்த திருமாவளவன், அவரிடம் இரு மனுக்களை கொடுத்துள்ளார். அதில் கன்ஷிராம் மற்றும் பிபி மண்டல் ஆகியோருக்கு ஹைதராபாத்தில் சிலை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு நிச்சயம் நிறுவுவோம் என அவர் உறுதியளித்துள்ளார்.

  இதனை தொடர்ந்து, உங்கள் சகோதரன் இங்கே இருக்கிறேன். ஹைதராபாத் உங்கள் இல்லம். எப்போது வேண்டுமானால் இங்கு வரலாம். பாஜகவைப் பற்றி பயம் வேண்டாம். அவர்களை எளிதில் வீழ்த்தலாம். நாம் இணைந்து செயல்படுவோம். என உறுதியளித்துள்ளார்.

  இதையும் வாசிக்க: அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையீடு? மோடியை சந்திக்கிறாரா ஓ.பி.எஸ்? - வைத்தியலிங்கம் பரபரப்பு தகவல்!

  தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர், பாஜக எதிர்க்கும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுடன் தொடர்ச்சியாக நல்லுறவை பேணி வருகிறார். இந்நிலையில் திருமாவளவன்  அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நிகழ்வு, அவர் தேசிய அரசியலில் பங்கேற்ற முடிவு செய்துவிட்டாரா  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Kcr, Thol. Thirumavalavan, VCK