தமிழகத்திற்கு தேவையான குடிநீரை வழங்க தெலங்கானா ஒப்புதல்!

”தமிழகத்தின் குடிநீர் பிரச்னை பற்றி நிதி ஆயோக் கூட்டங்களில் பலமுறை பேசியதாக சந்திரசேகர ராவ் குறிப்பிட்டார்”

தமிழகத்திற்கு தேவையான குடிநீரை வழங்க தெலங்கானா ஒப்புதல்!
தெலங்கானா முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்
  • Share this:
தமிழகத்திற்கு தேவையான குடிநீரை கொள்கை ரீதியில் வழங்க தெலங்கானா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தல்படி, அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசினர்.

அப்போது, காவிரி, கோதாவரி இணைப்பு மற்றும் தமிழகத்தின் குடிநீர் தேவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதம், சந்திரசேகர ராவிடம் கொடுக்கப்பட்டது.




ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஆலோசித்து, தமிழகத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயார் என கூறிய சந்திரசேகர ராவ், தமிழகத்தின் குடிநீர் பிரச்னை பற்றி நிதி ஆயோக் கூட்டங்களில் பலமுறை பேசியதாகவும் குறிப்பிட்டார்.

கேஆர்எஸ் அணையிலிருந்து பாயும் காவிரி.


கோடை தொடங்க இருக்கும் நிலையில் ஏற்கனவே திறந்துவிட்ட நீருக்காக ஆந்திர முதல்வருக்கு நன்றி சொல்லவும், மேலும் 3 டி.எம்.சி நீர் திறந்துவிட கோரிக்கை விடுப்பதற்காகவும் அமைச்சர்கள் ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஆந்திரா சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Also see...

 
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading