தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை தொடங்கிறார் சந்திரசேகர ராவ்

news18
Updated: October 3, 2018, 11:44 AM IST
தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை தொடங்கிறார் சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்.
news18
Updated: October 3, 2018, 11:44 AM IST
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்க உள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி அமைத்தது. தெலங்கானாவின் முதலாவது முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில் சந்திரசேகர ராவின் கட்சி வெற்றி பெற்றது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆட்சி உள்ள நிலையில், முன் கூட்டியே தேர்தலை நடத்த சந்திரசேகர ராவ் திட்டமிட்டு, தெலங்கானா சட்டப்பேரவையை அமைச்சரவை ஒப்புதலுடன் கலைத்தார். அதனால் அம்மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  இதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் இருக்கும் சந்திரசேகர ராவ் இன்று தனது தேர்தல் பரப்புரையை நிஜாமாபாத் மாவட்டத்தில் தொடங்குகிறார்.


இந்த கூட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை வானபர்திலும், 5-ம் தேதி வாராங்கல்லிலும் சந்திரசேகர ராவ் தனது பரப்புரையில் ஈடுபடுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
First published: October 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...