தெலுங்கானா மாநில கோஷாமஹால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா சிங் என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசி வெளியிட்ட காணொளியில் காரணமாகத் தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் போராட்டம் வெடித்ததில் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ ராஜா சிங் இணையத்தில் வெளியிட்ட 10 நிமிட வீடியோவில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முனாவர் ஃபாரூக்கி என்ற கலைஞரின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் அதில் நபிகள் நாயகத்தைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் பல இடங்களில் எம்.எல்.ஏ ராஜா சிங்கை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். திங்கள் அன்று இரவு பெரிய அளவில் போராட்டக்காரர்கள் இணைந்து ஹைதராபாத் காவல் நிலையங்களை முற்றுகையிட்டனர். இதனால் நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சைக்குள்ளான இந்த சம்பவத்தில் காவல்துறை உடனடி நடவடிக்கையாக எம்.எல்.ஏ ராஜா சிங்கை கைது செய்துள்ளனர்.
BJP suspends MLA T Raja Singh over his remarks on Prophet Muhammad
Read @ANI Story | https://t.co/x4PcveS0UK#TRajaSingh #BJP #Telangana pic.twitter.com/ayPKL8PahY
— ANI Digital (@ani_digital) August 23, 2022
இந்த நிகழ்வைத் தொடர்ந்து தெலுங்கானா பா.ஜ.க தலைமை, எம்.எல்.ஏ ராஜா சிங்கை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. கட்சி வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல் குறித்து விளக்கம் அளிக்க 10 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்துப் பேசியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP MLA, MLAs Suspension, Telangana