தெலங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் மகன் பந்தி பகீரத் சாய் கல்லூரி வளாகத்தில் சக மாணவரைச் சரமாரியாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோ வைரலானதையடுத்து பகீரத் சாய் மீது கல்லூரி நிர்வாகம் புகார் பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் மகன் பந்தி பகீரத் சாய் ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். நேற்று (17.01.2023) அவர் சக மாணவரைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கல்லூரி வளாகத்தில் வைத்து உடன் படிக்கும் சக மாணவரை பகீரத் சாய் கன்னத்தில் அறையும் காட்சிப் பதிவாகியுள்ளது. மேலும் அவருடன் இருக்கும் சக நண்பரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதே போல், மற்றொரு வீடியோவில் விடுதி அறையில் அதே மாணவரை பகீரத் சாய் மற்றும் அவரின் நண்பர்கள் இணைத்துத் தாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மஹிந்திரா பல்கலைக்கழகம் காவல் நிலையத்தில் தெலுங்கான பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் மகன் பந்தி பகீரத் சாய் மேல் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில், தாக்கப்பட்ட நபர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் தான், பகீரத் சாய் நண்பனின் தங்கையிடம் தவறுதலாக நடந்துகொண்டேன். அதனால் தான் என்னை அவர்கள் தாக்கினார்கள் என்று கூறியுள்ளார்.
Also Read : எலும்பை பிழிந்து எண்ணெய்.. இப்படியும் ஒரு கலப்படம்.. ஆந்திராவை அதிரவைத்த ஆயில் மோசடி..!
இது குறித்து தெலுங்கான பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் கூறுகையில், அரசியல் காரணத்திற்காக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இது போன்று தன் மகன் மீது அவதூறு சுமத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் சண்டையை அரசியலில் சேர்க்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று சரியாகத் தெரியவில்லை என்றும் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bjp state president, Telangana, Viral Video