காதலர் தினம் கொண்டாடிய ஜோடிக்கு பலவந்தமாக திருமணம்

போலீஸ் கண்காணிப்பையும் மீறி பஜ்ரங் தள் அமைப்பினர் காதல் ஜோடிக்கு பொது இடத்தில் திருமணம் நடத்தி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: February 14, 2019, 5:09 PM IST
காதலர் தினம் கொண்டாடிய ஜோடிக்கு பலவந்தமாக திருமணம்
காதலர்களுக்கு பலவந்தமாக திருமணம் நடத்திவைக்கும் பஜ்ரங்தள் அமைப்பினர்
Web Desk | news18
Updated: February 14, 2019, 5:09 PM IST
தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்தில் இருக்கும் பூங்காவில் காதல் ஜோடிக்கு பஜ்ரங்தள் அமைப்பினர் பலவந்தமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் .

வெளிநாட்டு கலாசாரமான காதலர் தினத்தை கொண்டாடக்கூடாது என்றும், பொது இடங்களில் காதலர்கள் நடமாடினால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்றும் வழக்கம்போல் இந்த ஆண்டும் பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் காதலர் தினமான இன்று தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்திலுள்ள கண்ட்ல்கொய்யா ஆக்சிஜன் பூங்காவில் ஜோடியாக சுற்றித்திரிந்த ஒரு காதல் ஜோடியை பஜ்ரங்தள் அமைப்பினர் மறித்து அவர்களுக்கு பலவந்தமாக திருமணம் நடத்தி வைத்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு பலவந்த திருமணங்கள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தெலங்கானா மாநிலம் முழுவதும் பொது இடங்கள், காதலர்கள் கூடும் பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் போலீஸ் கண்காணிப்பையும் மீறி பஜ்ரங் தள் அமைப்பினர் காதல் ஜோடிக்கு பொது இடத்தில் திருமணம் நடத்தி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Also see...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...