Home /News /national /

மாயாவதியுடன் கூட்டணி அமைத்த பவர்ஸ்டார்

மாயாவதியுடன் கூட்டணி அமைத்த பவர்ஸ்டார்

பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி

பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி

தெலுங்கானாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள தெலுங்கு நடிகர் பவர்ஸ்டார் பவன் கல்யாண் முடிவெடுத்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தலை, பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து எதிர்கொள்ள ஜன் சேனா கட்சித் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் முடிவெடுத்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஆந்திராவில் ஜன் சேனா கட்சியை தொடங்கிய பவன் கல்யாண், அங்கு இன்னும் களம் காணவில்லை. தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், தெலுங்கானாவில் அரசியல்வாதியாக அம்மாநில மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் பவனுக்கு இருந்தது. அண்ணன் சிரஞ்சீவி போல், அரசியலில் சறுக்கிவிடுவோமோ என பயம் வேறு. அதனால் போட்டியிடவேண்டாம் என முடிவெடுத்தார். ஆனால், புதன்கிழமையன்று லக்னோ சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களைச் சந்தித்து திரும்பியபின் பவனின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, சில தொகுதிகளை பவனின் கட்சிக்கு விட்டுத்தரவுள்ளதாகத் தெரிகிறது. இது பவனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப் பிரதேசத்தில் அக்டோபர் 29-ம் தேதி நடைபெறவுள்ள மத்திய தேர்தல் பணிக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தற்போதைய எம்எல்ஏ-க்களில் 80 பேருக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என ஆர்எஸ்எஸ் அறிக்கை அளித்துள்ளதால் வெலவெலத்துப் போயிருக்கும் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து வருகின்றனர்.

    பவன் கல்யாண்


    மறுபுறம், காங்கிரசில், ஜிட்டூ பட்வாரி, திக்விஜய் சிங் போன்றோர் பிளவுபட்டிருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலும் இன்னும் வெளியாகவில்லை.  100 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ள நிலையில், 12 பேர் தவிர்த்து, மற்ற அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் சீட் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

    குஷி, பத்ரி, கப்பர் சிங் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் பவர்ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவர்  நடிகர் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bahujan Samaj Party, Janasena party, Mayawati, Pawan Kalyan

    அடுத்த செய்தி