முகப்பு /செய்தி /இந்தியா / அனைத்துப் பள்ளிகளுக்கும் குழாய் நீர்: தெலுங்கானா மாநிலம் சாதனை

அனைத்துப் பள்ளிகளுக்கும் குழாய் நீர்: தெலுங்கானா மாநிலம் சாதனை

பள்ளிகளுக்குக் குழாய் நீர்.

பள்ளிகளுக்குக் குழாய் நீர்.

பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.தயாகர் ராவ் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கான பெருமைகள் முதல்வர் சந்திரசேகர் ராவ் கொண்டு வந்த பாகிரதா திட்டத்திற்கே போய்ச்சேர வேண்டும்.

  • Last Updated :

தெலுங்கானா மாநிலம் அதன் சாதனைகளுள் ஒன்றாக அனைத்துப் பள்ளிகளுக்கும் குழாய் மூலம் நீரைக் கொண்டு சென்று சாதனை படைத்துள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமல்ல அங்கன்வாடி மையங்கள் அனைத்துக்கும் குழாய் நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு குழாய் நீர் கொண்டு சென்ற சில மாநிலங்களின் பட்டியலில் தெலுங்கானா இணைந்து சாதனை புரிந்துள்ளது.

தெலுங்கானா அரசுதான் அனைத்து வீடுகளுக்கும் குழாய்நீர் கொண்டு சென்ற முதல் மாநிலமாகத் திகழ்கிறது, இதனை மத்தியில் ஆளும் பாஜக அரசே சில தினங்களுக்கு முன்பு பாராட்டியது.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஜல்சக்தி அமைச்சகம் பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆசிரமங்கள் அனைத்துக்கும் குழாய் நீர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும்100 நாட்கள் திட்டத்தை தொடங்கி தற்போது நிறைவேற்றியுள்ளது.

இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தது மத்திய அரசு. நீர் மூலம் பரவும் நோய்களுக்கு பள்ளி மாணாக்கர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு சுத்தமான நீரை குழாய் மூலம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை மத்திய அரசு வலியுறுத்தியது.

ஆந்திரா, இமாச்சலம், கோவா, ஹரியாணா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அனைத்துப் பள்ளிகள் அங்கன்வாடிகளில் குழாய்நீர் வசதி அமைத்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரூ.1.82 லட்சம் மற்றும் ரூ.1.42 லட்சத்துக்கு இரண்டு திட்டங்கள் முன்மொழியப்பட்டன. இதில் இரண்டாவது திட்டம் மழை நீர் சேகரிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டமும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மொத்தத்தில் 5.21 லட்சம் பள்ளிகள் 4.71 லட்சம் அங்கன்வாடிகள் ஆகியவற்றுக்கு குழாய் நீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.தயாகர் ராவ் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கான பெருமைகள் முதல்வர் சந்திரசேகர் ராவ் கொண்டு வந்த பாகிரதா திட்டத்திற்கே போய்ச்சேர வேண்டும்.

top videos

    பாகிரதா போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு இன்னும் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும், என்றார் தயாகர் ராவ்.

    First published:

    Tags: Chandrasekar rao, Telangana