தெலங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 52-ஆக அதிகரிப்பு

news18india
Updated: September 11, 2018, 11:03 PM IST
தெலங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 52-ஆக அதிகரிப்பு
தெலங்கானாவில் விபத்துக்குள்ளான பேருந்து
news18india
Updated: September 11, 2018, 11:03 PM IST
தெலங்கானா மாநிலத்தில் மலையில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் ஜெக்தியாலில் இருந்து அம்மாநில அரசு பேருந்து ஒன்று 82 பயணிகளுடன் கொண்டகட்டு கிராமத்தில் உள்ள மலை கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் ஓடடுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 30 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. பாதையில் இருந்து நான்கு முறை பேருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். 36க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் ஜெக்தியால் மாவட்ட அரசு மருததுவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.Loading...

மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் 22 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் பலர் உயிரிழக்க நேரிடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பள்ளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதிகப்படியான பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து குறித்து தெலுங்கானா முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்ட பகுதிகளில் காயமடைந்தவர்கள் தங்கள் உறவினர்களைத் தேடும் காட்சி மனதை உருக்குவதாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
First published: September 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...