Home /News /national /

பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியின் காலை நெருப்புக்குள் வைத்த மாந்த்ரீகன்- இரு கால்களையும் இழந்த பரிதாபம்

பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியின் காலை நெருப்புக்குள் வைத்த மாந்த்ரீகன்- இரு கால்களையும் இழந்த பரிதாபம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தெலங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியின் காலை மாந்த்ரீகன் தீக்குள் வைத்ததில் சிறுமி காலை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் குக்கிந்தா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அஸ்வினி. கடந்த ஒரு ஆண்டாக சிறுமி அஸ்வினிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த அஸ்வினியின் தந்தை வெங்கடையா அருகில் உள்ள நஷ்கல் கிராமத்தை சேர்ந்த மாந்திரீகன் ரபீக் உதவியை நாடினார். சிறுமி அஸ்வினிக்கு பேய் பிடித்துள்ளது என்று கூறிய ரஃபிக் பேய் ஓட்ட வேண்டும் என்று கூறினான்.

    இதற்காக அஸ்வினியை அவருடைய தந்தை வெங்கடையா மந்திரவாதி ரபீக்கிடம் அழைத்து சென்றார். மண் கலயத்தில் கரி, சிரட்டை ஆகியவற்றை நிரப்பி தீ மூட்டிய ரபீக், தீ கொழுந்து விட்டு எரிய துவங்கிய உடன் சிறுமியின் இரண்டு கால்களையும் பலவந்தமாகப் பிடித்து தீக்காயத்திற்கு வைத்தான்.

    இதனால் பலத்த காயமடைந்த சிறுமி அலறி துடித்தார். ஆனால் மாந்திரீகன் ரஃபீக் இதன்மூலம் பேய் ஓடிவிடும் என்றும் காலில் ஏற்பட்ட தீ காயம் விரைவில் ஆறிவிடும் என்றும் கூறி தன்னுடைய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு இரண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

    ஆனால் சிறுமி அஸ்வினி நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.கூடுதலாக அவருடைய இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. எனவே மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்று அங்கு தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - மு.க.ஸ்டாலின்

    இந்த நிலையில் அஸ்வினிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறிவிட்டனர். இதனால் மூடநம்பிக்கையின் பெயரில் தங்கள் மகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றிய அஸ்வினியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Telangana

    அடுத்த செய்தி