பீகார் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது - தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ்

தனிநபர் இடைவெளியைப் பின்பற்றும் வகையில், வாக்கு எண்ணிக்கையின்போது, வழக்கமாக ஒரு மேஜையில் 14 பேர் இருப்பதற்குப் பதிலாக 7 பேர் மட்டுமே இருந்ததாக தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

  பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 75 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் உருவெடுத்துள்ளது. எனினும், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.

  தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் இல்லத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தங்களது கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.

  2015-ம் ஆண்டிலும், தங்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்த நிலையில், அதிகாரத்தைப் பெறுவதற்காக பின்கதவு வழியாக பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

  Also read... ரூ.24.77 கோடி மதிப்பீட்டில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கிவைத்தார்!  இதனிடையே, பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றும் வகையில், வாக்கு எண்ணிக்கையின்போது, வழக்கமாக ஒரு மேஜையில் 14 பேர் இருப்பதற்குப் பதிலாக 7 பேர் மட்டுமே இருந்ததாக தெரிவித்தார். மேலும், கூடுதலாக 33,000 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் சுனில் அரோரா கூறினார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: