Home /News /national /

“சிபிஐ, அமலாக்கத்துறை என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்.” -தேஜஸ்வி யாதவ் அழைப்பு

“சிபிஐ, அமலாக்கத்துறை என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்.” -தேஜஸ்வி யாதவ் அழைப்பு

தேஜஸ்வி யாதவ்.

தேஜஸ்வி யாதவ்.

Bihar: தேஜஸ்வி யாதவ், அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ், தாய் ராப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் மீது ஏற்கெனவே சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அரசின் நிறுவனங்களைக் கண்டு தனக்குப் பயமில்லை எனப் பீகார் மாநில துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமாகிய தேஜஸ்வி யாதவ்.

    பீகாரில் பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைத்து முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக இருந்த ராஷ்டிரிய ஜனதா தள்ளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்தார். அவர் முதலமைச்சர் பதவியை ஏற்க, துணை முதலமைச்சர் பதவி தேஜஸ்வி யாதவ்வுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தேஜஸ்வி பேட்டியளித்தார். அப்போது எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட நிறுவனங்களை வைத்து பாஜக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்குப் பதில் அளித்த அவர் “நான் அமலாக்கத்துறை என் வீட்டில் வந்து தங்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.” எனத் தெரிவித்தார். மேலும் “அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறை தயவு செய்து வாருங்கள். வந்து உங்களுக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ அவ்வளவு நாள் என் வீட்டில் தங்குங்கள். எதற்கு இரண்டு மாதங்கள் கழித்து வரவேண்டும். இங்கேயே இருங்கள். அது சுலபமாக இருக்கும்.” எனத் தெரிவித்தார்.

    தேஜஸ்வி யாதவ், அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ், தாய் ராப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் மீது ஏற்கெனவே சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Bihar, Nithish kumar

    அடுத்த செய்தி