சீனா - பாகிஸ்தானின் கூட்டு தயாரிப்பான JF-17-ஐ விட மிகவும் மேலானது தேஜஸ் போர் விமானம் - விமானப்படை தலைவர் பதவுரியா தகவல்

83 தேஜஸ் போர் விமானங்களை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த புதனன்று ஒப்புதல் அளித்தது.

83 தேஜஸ் போர் விமானங்களை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த புதனன்று ஒப்புதல் அளித்தது.

  • Share this:
பாலகோட் போன்ற விமானத் தாக்குதல்களை தொடுக்கும் திறனை தேஜஸ் போர் விமானம் பெற்றிருப்பதாகவும், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இவை சீனா - பாகிஸ்தான் கூட்டாக உருவாக்கியிருக்கும் JF-17 போர் விமானத்தை விடவும் மேம்பட்டதாகவும், சிறந்ததாகவும் இருப்பதாக விமானப்படை தலைவர் பதவுரியா கூறியிருக்கிறார்.

இந்திய ராணுவத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், ரூ.48,000 கோடி மதிப்பீட்டில் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 83 தேஜஸ் போர் விமானங்களை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த புதனன்று ஒப்புதல் அளித்தது.தேஜஸ் போர் விமானங்கள் தொடர்பாக விமானப்படை தலைவர் பதவுரியாவிடம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தினர் பேசியபோது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும் தேஜஸால், பாலகோட் போன்று தாக்குதல்கள் தொடுக்க முடியுமா என கேட்டனர்.

இக்கேள்விக்கு பதிலளித்து பேசிய பதவுரியா, தாக்குதல் திறனை பொறுத்தவரையில் பாலகோட் சமயத்தில் இருந்ததை விடவும் கூடுதல் திறன் படைத்ததாக தேஜஸ் போர் விமானம் உள்ளது.

இந்திய போர் விமானமான தேஜஸ், சீனா - பாகிஸ்தான் கூட்டாக உருவாக்கியிருக்கும் JF-17 போர் விமானத்தை விடவும் மேம்பட்டதாகவும், சிறந்ததாகவும் இருப்பதாக தெரிவித்தார்.மேலும் விமானப்படையில் 83 தேஜஸ் விமானங்களும் சேர்க்கப்பட்ட பின்னர் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களான Astra, ஆகாயத்திலிருந்து ஆகாய இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் பொருத்தப்படும் என தெரிவித்தார்.

இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்துவதில் 83 தேஜஸ் விமானங்களின் கொள்முதல் மிக முக்கியமானதாக இருக்கும், squadronகளின் எண்ணிக்கை இதன் மூலம் இரண்டில் இருந்து 6-ஆக அதிகரிக்கும் எனவும் பதவுரியா தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு தொழில் மேம்பாட்டிலும் இது முக்கிய முடிவாக இருக்கிறது. உள்நாட்டு வடிவமைப்பாளர்களுக்கும் இது பெரிய அங்கீகாரமாக இருக்கும். விமானப்படைக்கும், நம் நாட்டுக்கும் இது பெரிய படியாக அமையும் என அவர் கூறினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: