காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு கிளம்பலாம் என்ற காரணத்துக்காக 100-க்கும் மேற்பட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

news18
Updated: August 8, 2019, 11:38 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
காஷ்மீர்
news18
Updated: August 8, 2019, 11:38 AM IST
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனவல்லா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் விசாரணை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கிய அறிவிப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு கிளம்பலாம் என்ற காரணத்துக்காக 100-க்கும் மேற்பட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தெஹ்சீன் பூனவல்லா வழக்குத் தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவருடைய மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெஹ்சீன் தெரிவித்துள்ளார்.

Also see:

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...