காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

இந்நிலையில் பேருந்து நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி
காஷ்மீர் குண்டு வெடிப்பு
  • News18
  • Last Updated: March 7, 2019, 8:23 PM IST
  • Share this:
காஷ்மீர் மாநிலம் ஜம்மு பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஒரு பலியானார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம், ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பேருந்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த 30 பேர் காயமடைந்ததாக ஜம்மு காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரித்துவாரைச் சேர்ந்த முகமது ஷரீக் என்ற 17 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பேருந்து நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்துக்கு கீழே இருந்து குண்டு வெடித்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

காஷ்மீர் குண்டு வெடிப்பு


கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டு வெடிப்பு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.இந்த வழக்குத் தொடர்பாக, காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியைச் சேர்ந்த யாசிர் பட் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு, ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்போடு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Also see:

First published: March 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்