முகப்பு /செய்தி /இந்தியா / ஒரே நொடி.. முடிந்த வாழ்க்கை.. நடனமாடியபோது உயிரிழந்த 19 வயது இளைஞர் - ஷாக் வீடியோ!

ஒரே நொடி.. முடிந்த வாழ்க்கை.. நடனமாடியபோது உயிரிழந்த 19 வயது இளைஞர் - ஷாக் வீடியோ!

உயிரிழந்த முத்யம்

உயிரிழந்த முத்யம்

தெலங்கானா மாநிலம் பார்டிகே கிராமத்தில், நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலங்கானா மாநிலம் பார்டிகே கிராமத்தில், நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் சித்தையா என்பவரின் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சித்தையாவின் உறவினரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முத்யம் என்பவர் கலந்துகொண்டார்.

திருமண வீட்டார் சார்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தெலுங்கு பாடல்களுக்கு முத்யம் உற்சாகமாக நடனமாடினார். திடீரென மயங்கி விழுந்த அவரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்த போது, இளைஞர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

19 வயதே ஆன இளைஞன் மரணமடைந்ததிருப்பது அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள. இளைஞருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

First published:

Tags: Cardiac Arrest