நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட சிறுமி.. அதிர்ச்சியில் பெற்றோருக்கு ஹார்ட் அட்டாக்

மாதிரிப்படம்

மகள் நிர்வாணப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டதை கேள்விப்பட்ட பெற்றோருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    குஜராத்தை சேர்ந்த சிறுமி தனது நிர்வாணப்படங்களை இணையத்தில் பதிவிட்டதை கேள்விப்பட்ட அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் நடந்து வருகிறது. குஜராத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் அவருக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்துள்ளனர். மேலும் மகள் கல்வி கற்கும் போது அவளுக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக வீட்டில் அவருக்கென ஒரு தனி அறையை ஒதுக்கி கொடுத்துள்ளனர். சிறுமி ஆன்லைன் கிளாஸ் தானே படிக்கிறாள் என அவரது பெற்றோர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அறைக்குள் சிறுமி படிக்கிறாள் என நினைத்து அவரை கண்காணிக்காமல் இருந்துள்ளனர்.

    Also Read: குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு இல்லை.. மனநல மருத்துவர் அளித்த சான்று

    கல்வி பயில வேண்டும் என பெற்றோர்கள் செய்துக்கொடுத்த வசதியையும் அவருக்கு அளித்த சுதந்திரத்தையும் சிறுமி தவறாக பயன்படுத்திக்கொண்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அந்த சிறுமி தன்னுடைய முழு நிர்வாணப்படங்களை எடுத்து அதனை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது உறவுக்கார சிறுமியை நிர்வாணப்படம் எடுத்து இணையத்தில் பதிவிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். சிறுமியின் தொந்தரவு தாங்க முடியாமல் உறவுக்கார சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமி நிர்வாணப்படங்களை பதிவேற்றம் செய்த விபரத்தையும் கூறியுள்ளார்.



    Also Read:  மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இளைஞரின் காலை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - நால்வர் கைது

    இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் இந்த விவகாரத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சிறுமியின் எதிர்காலமே பாதிக்கப்படும் எனக் கருதி நடந்தவற்றை அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.மகளின் இந்த செயலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்து தாய், தந்தை இவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பியுள்ளனர். சிறுமி தொடர்ந்து சமூகவலைதளத்தில் தன்னுடைய படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.
    இதனையடுத்து அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. நிர்வாணப்புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வது சைபர் சட்டப்படி குற்றமாகும். காவல்துறை நினைத்தால் உன்னை இப்போது கூட கைது செய்யலாம் என அவருக்கு புரியும்படி எடுத்துக்கூறியுள்ளார்.



    தன் தவறை உணர்ந்த சிறுமி இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என மருத்துவர் முன்னிலையில் தாய், தந்தையிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளார். மேலும் அவர் சமூகவலைதளத்தில் தொடங்கிய கணக்குகளையும் டெலிட் செய்துவிட்டார். கல்விக்காக மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துவேன் என உறுதியளித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: