மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி பிரமுகரின் மகன் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்செயலின் முக்கிய குற்றவாளி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரின் மகன் என உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், மாணவி கடந்த வாரம் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் வீடு திரும்பிய மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு உடனடியாக உயிரிழந்துள்ளார். வீடு திரும்பிய மாணவிக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. மாணவியின் நண்பர்களிடம் விசாரித்ததில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
மேலும், கட்சி உள்ளூர் பிரமுகர்கள் கட்டாயப்படுத்தி மாணவியின் இறுதி சடங்கை அவசர அவசரமாக மேற்கொள்ள செய்ததாக பெற்றோர் கூறியுள்ளனர். மாணவியின் பெற்றோர் புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட கட்சி பிரமுகரின் 21 வயது மகனை கைது செய்துள்ளது.மேலும் குற்றச் செயல் தொடர்பான விசாரணையை முடுக்கியுள்ளது.
இதையும் படிங்க: ராமநவமி அன்று அசைவ உணவு: ஜேஎன்யூ மாணவர்கள் இடையே மோதல்
இதுதொடர்பாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஷாஷி பஞ்சா, "பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கட்சி எந்தவித தயவும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்த விஷயத்தை அரசியலாக்காமல், காவல்துறை விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பிரபல ரவுடி ஓரின சேர்க்கையாளர் அபினேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது...
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்காக போராடிவரும் அக்கட்சி ஹன்ஸ்காலி பகுதியில் 12 மணிநேரம் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.