ஹோம் /நியூஸ் /இந்தியா /

கல்வியில் மீண்டும் இந்தியா முதன்மை நிலையை அடைய வேண்டும் - வெங்கையா நாயுடு

கல்வியில் மீண்டும் இந்தியா முதன்மை நிலையை அடைய வேண்டும் - வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு

தேசிய கல்வி கொள்கை (NEP) 2020-ல் கூறியபடி, கல்வி முறையில் மதிப்பு அடிப்படையிலான மாற்றம் தேவை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தடைகளைத் தாண்டி கல்வியை கடைசி மைல் வரை கொண்டு செல்வதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார். சமீபத்தில் பேசிய வெங்கையா நாயுடு, நாட்டின் பண்டைய ஞானத்தின் அடிப்படையில் கல்வி முறையை இந்தியமயமாக்க (Indianising) அழைப்பு விடுத்தார். தவிர காலனித்துவ கல்வி முறை (colonial education system) மக்களிடையே தாழ்வு மனப்பான்மை மற்றும் வேற்றுமையை உருவாக்கியுள்ளதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டு உள்ளார்.

தேசிய கல்வி கொள்கை (NEP) 2020-ல் கூறியபடி, கல்வி முறையில் மதிப்பு அடிப்படையிலான மாற்றம் தேவை என்றும் அவர் கூறினார். கல்வியை ஜனநாயகப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை பற்றி பேசிய வெங்கையா நாயுடு, பல தடைகளை தாண்டி கல்வியை கடைசி மைல் வரை கொண்டு செல்லும் போது மாணவர்களின் பயன்படுத்தப்படாத திறனை பெரிய நன்மைக்காக பயன்படுத்த கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என்றார்.

இது தொடர்பாக Vice President Secretariat வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுமை, கற்றல் மற்றும் அறிவுசார் தலைமை ஆகியவற்றின் உலகளாவிய மையமாக இந்தியாஉருவாக வேண்டியதன் அவசியத்தையும் வெங்கையா நாயுடு வலியுறுத்தி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. ரிஷிஹுட் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற நாயுடு, இந்தியா ஒரு காலத்தில் "விஸ்வ குரு" (Vishwa Guru) என்று போற்றபட்டதையும் நினைவு கூர்ந்தார்.

ALSO READ |  பனாமா பேப்பர்ஸ் வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

நாளந்தா, தக்ஷஷிலா மற்றும் புஷ்பகிரி போன்ற பல சிறந்த கல்வி நிறுவனங்களை பண்டைய காலத்தில் நாம் கொண்டிருந்தோம். இதில் உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க வந்தனர். கல்வியில் மீண்டும் நாடு அந்த முதன்மை நிலையை அடைய வேண்டும் என்று நாளந்தா கூறி இருக்கிறார்.

முழுமையான கல்வியின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளதை நினைவு கூர்ந்த துணை ஜனாதிபதி நம் பண்டைய பாரம்பரியத்தை புதுப்பிக்கவும், கல்வி நிலப்பரப்பை மாற்றவும் அழைப்பு விடுத்து உள்ளார். அதே நேரத்தில் புதிய பல்கலைக்கழகங்கள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்றார்.

ALSO READ |  வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஒரு தேசத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு கல்விக்கு இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், கல்வியை ஒரு "மிஷனாக" எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். கல்வி துறையின் அனைத்து நிலைகளிலும் மேம்பாடு தேவை என்று வலியுறுத்தி இருக்கும் வெங்கையா நாயுடு, ஆராய்ச்சியின் தரம், அனைத்து நிலைகளிலும் கற்பித்தல், சர்வதேச நிறுவனங்களின் தரவரிசை, பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி முறையின் பல அம்சங்களை மேம்படுத்துதல் அவசியம் என்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான சுரேஷ் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Education, Technology, Venkaiah Naidu